அண்மை நிகழ்வுகள்

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மூலமும் வெளியிடப்பட்டுள்ள சட்டத்தின் பிரகாரமும் மற்றுமொரு மாநிலம் அல்லது நாடு உருவாகியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இது மற்றுமொரு ஈழத்தை உருவாக்கிய நிலைமை எனவும் கூறியுள்ளார்.

இந்த சட்டமானது தெளிவாக தனியான நாட்டை உருவாக்கும் வழிமுறை. குறித்த சட்டத்தின் பிரகாரம், துறைமுக நகரை ஆட்சி செய்வது ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவாகும்.

துறைமுக நகரை உருவாக்க கடலை நிரப்ப வேண்டிய தேவை இருக்கவில்லை. அபிவிருத்திகளை மேற்கொள்ள நாட்டில் காணப்படும் காணிகளை பயன்படுத்தி இருக்கலாம் எனவும் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]
Top